நடமாடும் சிகிச்சை வாகனத்தை (Mobile Therapy Van) பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ் குமார் துவங்கி வைத்தார். முதியோர்கள், விதவைகள் மற்றும் பிற வகுப்பினர்களுக்கு அவர்தம் இருப்பிடம் சென்றே அடிப்படை மருத்துவத் தேவைகளை இந்த நடமாடும் சிகிச்சை வாகனங்கள் வழங்கும்.
இந்த வாகனங்களில் அடிப்படை மருத்துவ சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கான குழுக்கள் பயணிக்கும்.
இந்தத் திட்டமானது உலக வங்கி (World Bank) மற்றும் பீகார் அரசின் சமூக நலத் துறையின் (Social Welfare Department) கூட்டு முயற்சியாகும்.