நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் சமீபத்தில் காலமானார்.
கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசான் துகளைக் கண்டுபிடித்ததற்காக பீட்டர் ஹிக்ஸ் 2013 ஆம் ஆண்டில் நோபல் பரிசினைப் பெற்றார்.
1964 ஆம் ஆண்டில், ஹிக்ஸ் ஒரு புதிய துகள் இருப்பதைக் கணித்தார்.
மற்ற துகள்கள் மற்றும் அண்டத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் கோள்களும் எவ்வாறு தனது நிறையைப் பெற்றன என்பது குறித்து விளக்கும் ஒரு குறிப்பிட்டப் பரிமாணத்தின் அணு சார் துகள் இருக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.
ஆனால் 2012 ஆம் ஆண்டு வரை அவரது கோட்பாடு உறுதிப்படுத்தப் படவில்லை.
2012 ஆம் ஆண்டில், CERN அமைப்பின் அறிவியலாளர்கள், இறுதியாக ஹிக்ஸ் போசான் துகளைக் கண்டறிந்ததாக அறிவித்தனர்.
1992 ஆம் ஆண்டில் இயற்பியலாளர் டாக்டர் லியோன் லெடர்மேன் என்பவர் எழுதிய "The God Particle: If the Universe is the Answer, What Is the Question?" என்ற புத்தகத்தில் ஹிக்ஸ் போசான் கடவுள் துகள் என்று குறிப்பிடப் பட்டது.