பூமியிலிருந்து 60 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பீட்டா பிக்டோரிஸ் அமைப்புக்குள் ஒரு புதிய மாபெரும் கோளான பீட்டா பிக்டோரிஸ் சி-ஐ கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது இளம் தூசி வளையமான பீட்டா பிக்டோரிஸைச் சுற்றி வரும் இரண்டாவது வெளிக் கோளாகும்.
வியாழனின் நிறையை போன்று 9 மடங்கு நிறையைக் கொண்டுள்ள இது பீட்டா பிக்டோரிஸிலிருந்து 2.7 வானியல் அலகு தூரத்தில் சுற்றி வருகிறது.
பீட்டா பிக்டோரியஸ் பூமியிலிருந்து சுமார் 63 ஒளியாண்டுகள் தொலைவில் பிக்டர் விண்மீன் திரளில் அமைந்துள்ளது.
உயர் துல்லிய ஆர திசைவேக கோள் ஆராய்ச்சி ஒளிக்கதிர் ஆய்வு கருவியிலிருந்து கிடைத்த ஆர திசைவேக தரவின் 10 ஆண்டுகால ஆய்வின் மூலம் பீட்டா பிக்டோரிஸ் மறைமுகமாக கண்டறியப்பட்டது.
இது சிலியில் உள்ள லாசில்லா ஆய்வகத்தில் அமைந்துள்ள ஐரோப்பியத் தெற்குஆய்வகத்தின்ESO 3.6 மீ தொலைநோக்கியின் திட்டமாகும்.