அரசின் பல்வேறு திட்டங்களில் வெளிப்படைத் தன்மை மற்றும் விழிப்புணர்வுக்காக ‘மக்களுக்கு அதிகாரமளித்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை செயல்படுத்துல்’ (Peoples Empowerment Enabling Transparency and Accountability) அல்லது பீத்தா (PEETHA) எனும் பெயரிடப்பட்ட திட்டத்தை ஒடிசாவின் முதல்வர் துவக்கி வைத்தார்.
பீத்தாவானது 3T-ஐ (Technology, Transparency and Team work) அடிப்படையாகக் கொண்டது ஆகும். இது T-தொழில்நுட்பம், T-வெளிப்படைத் தன்மை மற்றும் T-கூட்டுவேலை ஆகியவற்றின் மாதிரியைக் கொண்டது ஆகும்.
இது ஒடிசா அரசின் முதன்மைத் திட்டமான அமா கோயான் அமா பிகாஸ் என்ற திட்டத்தின் (AGAB - Ama Gaon Ama Bikas Yojana) துணைத் திட்டமாகும்.
இந்த முன்முயற்சியின் கீழ், 2018 டிசம்பரில் தொடங்கி ஒவ்வொரு மாதமும் 15 முதல் 20 தேதி வரை கிராமப் பஞ்சாயத்து அளவிலான முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.