TNPSC Thervupettagam

பீமா-கோரேகான் யுத்தம்

January 4 , 2018 2515 days 991 0
  • மராத்தா ஆட்சியாளரான பாஜி ராவ் பேஷ்வா II என்பவருக்கும், உள்ளூர் மஹர் (Mahar) சமூகத்தவரோடு கூட்டிணைப்பை கொண்ட ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் கி.பி 1818 ஆம் ஜனவரி மாதம் நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலேய -மராத்தா போரின் (War) ஒரு யுத்தமே (Battle) பீமா-கோரேகான் யுத்தமாகும்.
  • போரில் ஆங்கிலேயர்கள் பெற்ற வெற்றியானது மராத்திய பேஷ்வாக்களின் ஆதிக்கத்தின் முடிவுக்கு இட்டுச் சென்றது.
  • வரலாற்று ரீதியாக மஹர் சமூகத்தவர் தீண்டத்தகாதவர்களாக (Untouchables) நடத்தப்பட்டு வந்தனர்.
  • இருப்பினும் 17 ஆம் நூற்றாண்டில் மராத்திய சாம்ராஜ்ஜியத்தின் பேரரசர் சத்ரபதி சிவாஜி, அதிக எண்ணிக்கையில் மஹர் சமூகத்தவர் பலரை தன் மராத்திய படைகளில் பணியமர்த்தினார்.
  • எனினும் பிந்தைய காலங்களில், இரண்டாம் பாஜி ராவ் மஹர் சமூகத்தவர் மராத்திய ராணுவத்தில் பணிபுரிய நிராகரித்து அதன் மூலம் அவர்களை அவமானப்படுத்தியதைத் தொடர்ந்து, மஹர் சமூகத்தவருக்கும் பேஷ்வாக்களுக்கும் இடையிலான உறவில் பிளவு உண்டானது.
  • இதனால் அவர்கள் பேஷ்வாக்களுக்கு எதிராக ஆங்கிலேயர்களுடன் இணைந்தனர்.
  • மூன்றாம் ஆங்கிலேய -மராத்தா போரின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் நினைவாக ஓர் நினைவு வெற்றித் தூணை (Koregaon Ranstambh) 1818-ல் பீமா-கோரேகான் எனும் பகுதியில் ஆங்கிலேயர்கள் அமைத்தனர்.
  • இவ்வருடம், இந்த யுத்தத்தின் 200-ஆவது ஆண்டு நினைவு கடைபிடிக்கப்பட்ட போது, மகாராஷ்டிராவில் இருபிரிவினிற்கிடையே வன்முறை வெடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்