பெண்களுக்கு பெரும் அதிகாரம் அளிப்பதற்காகவும் மேலும் அவர்களின் நிதி சார் உள்ளடக்கத்திற்காகவும் மத்திய அரசு இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) ஒரு முன்னெடுப்பாகும்.
'பீமா சகி யோஜனா' மூலம், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 70 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு நிதி அறிவு மற்றும் காப்பீட்டு விழிப்புணர்வை வழங்கவதற்காக முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு சிறப்புப் பயிற்சி மற்றும் உதவித் தொகை வழங்கப்படும்.
இந்தப் பயிற்சிக்குப் பிறகு, பெண்கள் LIC முகவர்களாகவும், பட்டதாரிக் காப்பீட்டுச் சகிகளாகவும் (முகவர்களாகவும்) பணியாற்றலாம்.
LIC நிறுவனத்தில் மேம்பாட்டு அதிகாரியாகப் பணி புரியும் ஒரு வாய்ப்பும் கிடைக்கப் பெறும்.