கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமானது பீமா மூங்கிலைக் கொண்டு தனது வளாகத்திற்குள்ளேயே ஒரு “ஆக்சிஜன் பூங்காவை” அமைத்துள்ளது.
பீமா மூங்கிலானது பாம்புசா பல்கூவா எனும் அதிக உயிரி பொருட்களை வழங்குகின்ற மூங்கில் இனத்திலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உயர் ரக மரபார்ந்த மூங்கில் செடியாகும்.
இந்த மூங்கிலானது எந்த விதையையும் வழங்காமலும் பல ஆண்டுகளுக்கு மடியாமலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
இந்த இனமானது கார்பன்டை ஆக்சைடு உமிழ்வினைத் தணிக்கும் ஒரு சிறந்த ‘கார்பன் மடு’ (கார்பன் ஈர்ப்பு) ஆகும்.
4 ஆண்டுகளான பீமா மூங்கில் மரங்களால் ஆண்டொன்றிற்கு 400 கிலோ கார்பன்டை ஆக்சைட் வரை உள்ளிழுத்துக் கொள்ள முடியும்.
செழித்து வளர்ந்த ஒரு பீமா மூங்கில் மரமானது ஆண்டொன்றிற்கு 300 கிலோ ஆக்சிஜனை வெளியிடும்.