TNPSC Thervupettagam

பீமா வாஹக் பற்றிய வழிகாட்டுதல்கள்

October 17 , 2023 278 days 167 0
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது (IRDAI) பீமா வாஹக் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இது பெண்களை மையமாகக் கொண்ட, காப்பீட்டுச் சேவைகளில் ஊரகப் பகுதிகளுக்கான சேவைகளையும் உள்ளடக்குவதை மேம்படுத்துவதற்கான ஒரு மிக முக்கிய மற்றும் பிரத்தியேகத் திட்டமாகும்.
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ‘பீமா வாஹக் பிரதிநிதிகளை’ நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.
  • ஒழுங்குமுறை ஆணையத்தினால் கொண்டு வரப்பட்ட பீமா விஸ்டார் திட்டம் அல்லது மலிவான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் விரிவான காப்பீட்டு திட்டங்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டப் பிரிவினருக்கு கொண்டு சேர்ப்பதில் பீமா வஹாக்கள் முக்கியப் பங்கினை வகிப்பர் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • பீமா வஹாக்களுக்கு (தனிநபர் மற்றும் பெரு நிறுவனங்கள் உட்பட) கையடக்க மின்னணு தொடர்புச் சாதனங்களானது வழங்கப்படும்.
  • காப்பீட்டு நிறுவனங்களின் மின்னணு தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தச் சாதனங்களின் மூலம், பீமா விஸ்டார் திட்டம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களால் குறிப்பிடப்பட்ட பிற சேவைகள் ஆகியவற்றினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சேவையினை வழங்க இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்