TNPSC Thervupettagam

பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை

February 26 , 2021 1278 days 604 0
  • இந்தியாவானது உள்நாட்டில் உருவாக்கிய பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை அமைப்புகளான ‘ஹெலினா’ மற்றும் ‘துருவஸ்திரா’ ஆகியவற்றை போக்ரானில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • ஹெலினா (இராணுவப் பதிப்பு) மற்றும் துருவஸ்திரா (விமானப்படைப் பதிப்பு) ஆகியவை மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணைகளின் வானூர்தி வழி செலுத்தப்படும் பதிப்புகள் ஆகும்.
  • அவை நாக் (NAG) ஏவுகணை அமைப்பு என்றும் அழைக்கப் படுகின்றன.
  • இந்த ஏவுகணை அமைப்புகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டுள்ளன.
  • இரண்டு ஏவுகணைகளாலும் நேரடியாக தாக்கும் முறை மற்றும் உயரத்திற்குச் சென்று இலக்குகளைத் தாக்கும் முறை ஆகிய இரண்டையும் மேற்கொள்ள முடியும்.
    • உயரத்திற்குச் சென்று தாக்கும் முறை: ஏவுகணை ஏவப்பட்ட பின் நேராக மேலேறி ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பயணித்து பின்னர் இலக்கைத் தாக்குதல்.
    • நேரடி தாக்குதல் முறை: இது குறைந்த உயரத்தில் பயணித்து, இலக்கை நேரடியாக தாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்