இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நாக் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணை (ATGM) மற்றும் ஹெலினா (ஹெலிகாப்டரில் இருந்தபடி ஏவக் கூடிய NAG) ஆயுத அமைப்பின் ஒரு மாறுபட்ட வடிவமான ‘துருவஸ்த்ரா’ ஆகிய ஆயுதங்கள் இந்திய ஆயுதப் படையில் சேர்க்கப்பட உள்ளன.
நாக் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணை மற்றும் ஹெலினா (துருவஸ்த்ரா) ஆகிய இரண்டு ஏவுகணைகளையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளன.
மேலும் அவை பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்தினால் தயாரிக்கப் படுகின்றன.
நாக் என்பது நிலத்தில் இருந்து வானில் பாயும் ஏவுகணையாகும்.
துருவஸ்த்ரா என்பது வானில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஆகும்.