TNPSC Thervupettagam
August 4 , 2022 719 days 407 0
  • கனடிய அறிஞர், ஜெஃப்ரி ஆம்ஸ்ட்ராங் இந்தியக் கலாச்சார உறவுகள் சபையின் 2021 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற இந்தியவியலாளர் விருதினைப் பெற்றுள்ளார்.
  • “இந்தியாவின் தத்துவம், சிந்தனை, வரலாறு, கலை, கலாச்சாரம், இந்திய மொழிகள், இலக்கியம், நாகரிகம், சமூகம் போன்றவற்றிற்கான ஆய்வு/கற்பித்தல்/ஆராய்ச்சி ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறந்தப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில்” இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • ஜெர்மனி, சீனா, ஜப்பான், இங்கிலாந்து, தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முந்தைய விருதாளர்களுடன் இணைந்து,  இந்த விருதினைப் பெறும் ஏழாவது நபர் ஆக இப்பட்டியலில் இவர் இடம் பெற்றுள்ளார்.
  • இந்த வருடாந்திர விருதானது 2015 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற முதல் உலக இந்தியவியல் மாநாட்டின் போது நிறுவப்பட்டது.
  • 2015 ஆம் ஆண்டில் இந்த விருதை முதன்முதலில் பெற்றவர் ஜெர்மனியைச் சேர்ந்த பேராசிரியர் ஹென்ரிச் ஃப்ரீஹர் வான் ஸ்டிடென்கிரான் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்