சிறந்த விஞ்ஞானியும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) முன்னாள் தலைவருமான யஷ்பால் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
டாடா அடிப்படை ஆராய்ச்சி மையத்தில் (Tata Institute of Fundamental Research - TIFR) தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய யஷ்பால், நாட்டில் குடிமகனுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான பத்மவிபூஷண் விருதைப் பெற்றுள்ளார். இவர் காஸ்மிக் கதிர்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்.