TNPSC Thervupettagam

புகழ்மிக்க பீல்ட்ஸ் விருது - அக்ஷய் வெங்கடேஷ்

August 2 , 2018 2209 days 688 0
  • ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சர்வதேச கணிதவியலாளருக்கான காங்கிரஸ் மாநாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணிதவியலாளர் அக்ஷய் வெங்கடேஷ்க்கு புகழ்மிக்க பீல்ட்ஸ் விருது வழங்கப்பட்டது.
  • மொத்தம் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு நபர்களில் இவரும் ஒருவர். இவருடைய வயது 30 ஆகும். இவ்விருது கணிதத்திற்கான நோபல் பரிசு என்றும் அழைக்கப்படுகிறது.
  • மற்ற மூன்று வெற்றியாளர்கள்:
    • கவ்ச்சர் பிர்கர் (ஈரானிய குர்திஸ் இனத்தைச் சேர்ந்தவர்)
    • ஜெர்மனியின் பீட்டர் ஸ்கோல்ஸ்
    • இத்தாலியின் அலிசோ பிகாலி
  • பீல்டு விருதானது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் 40 வயதுக்குக் கீழ் உள்ள புகழ்மிக்க கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • துரந்தோவில் 1924ம் ஆண்டின்  கணிதக் காங்கிரசை நடத்திய கனடாவின் கணிதவியலாளர் ஜான் சார்லஸ் பீல்ட்ஸ்-ன் வேண்டுகோளின் படி 1932ஆம் ஆண்டு இவ்விருது தொடங்கப்பட்டது.
  • ஒவ்வொரு வெற்றியாளரும் 15,000 கனடா டாலர்கள் அளவுக்கு பரிசுத் தொகையைப் பெறுவார்கள். எப்பொழுதும் குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் அல்லது நான்கு நபர்கள் இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில்  கௌரவிக்கப்படுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்