ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சர்வதேச கணிதவியலாளருக்கான காங்கிரஸ் மாநாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணிதவியலாளர் அக்ஷய் வெங்கடேஷ்க்கு புகழ்மிக்க பீல்ட்ஸ் விருது வழங்கப்பட்டது.
மொத்தம் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு நபர்களில் இவரும் ஒருவர். இவருடைய வயது 30 ஆகும். இவ்விருது கணிதத்திற்கான நோபல் பரிசு என்றும் அழைக்கப்படுகிறது.
மற்ற மூன்று வெற்றியாளர்கள்:
கவ்ச்சர் பிர்கர் (ஈரானிய குர்திஸ் இனத்தைச் சேர்ந்தவர்)
ஜெர்மனியின் பீட்டர் ஸ்கோல்ஸ்
இத்தாலியின் அலிசோ பிகாலி
பீல்டு விருதானது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் 40 வயதுக்குக் கீழ் உள்ள புகழ்மிக்க கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
துரந்தோவில் 1924ம் ஆண்டின் கணிதக் காங்கிரசை நடத்திய கனடாவின் கணிதவியலாளர் ஜான் சார்லஸ் பீல்ட்ஸ்-ன் வேண்டுகோளின் படி 1932ஆம் ஆண்டு இவ்விருது தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு வெற்றியாளரும் 15,000 கனடா டாலர்கள் அளவுக்கு பரிசுத் தொகையைப் பெறுவார்கள். எப்பொழுதும் குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் அல்லது நான்கு நபர்கள் இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்படுவார்கள்.