இந்தத் தினமானது மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமையன்று அனுசரிக்கப் படும் வருடாந்திர சுகாதார விழிப்புணர்வுத் தினமாகும்.
புகைபிடிக்கும் பழக்கத்தினை விட்டுவிடுமாறு மக்களை ஊக்குவிப்பது மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தில் அந்தப் பழக்கம் ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புகைபிடித்தல் தடை நாள் என்ற விழிப்புணர்வு இயக்கம் ஆனது முதன்முதலில் 1984 ஆம் ஆண்டு ஐக்கியப் பேரரசில் சாம்பல் புதன் தினத்தன்று தொடங்கப்பட்டது.