TNPSC Thervupettagam

புகைபிடித்தல் நிறுத்தப் பிரச்சாரம்

June 11 , 2018 2363 days 662 0
  • அண்மையில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation) நிகழ்ச்சியில், இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகமானது புகைபிடித்தலை நிறுத்துவதை ஊக்குவிப்பதற்காக தேசிய அளவிலான ஊடகப் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.
  • ”சிகரெட் / பீடி என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்” ('What Damage Will This Cigarette/Bidi Do) எனத் தலைப்பிடப்பட்ட பொதுச் சேவை அறிவிப்பானது புகைப்பிடிப்பாளர்களை ஒவ்வொரு சிகரெட்டும், பீடியும் மாரடைப்பு, புற்றுநோய், நுரையீரல் நோய்கள் போன்ற பல ஆபத்தான நோய்களுள் ஒன்றுக்கான பாதையாக சிந்திக்கத் தூண்டுகின்றது.
  • உலக அளவில் புகையிலை பயன்பாட்டாளர்களின் இறப்புக்கு முன்னணி காரணமான புகையிலையோடு தொடர்புடைய மாரடைப்பு மற்றும் பிற இதயக் கோளாறுகளை முன்னிலைப்படுத்துவதன் மூலம், இப்பிரச்சாரமானது இவ்வாண்டிற்கான உலகப் புகையிலையில்லா தினத்தின் (World No Tobacco Day) கருத்துருவான “புகையிலை இதயத்தை அழிக்கின்றது” (Tobacco Breaks Hearts) எனும் கருத்துருவை அனைவரும் அறியுமாறு வலியுறுத்துகின்றது.
  • 17 மொழிகளில் அனைத்து முக்கிய தேசிய அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ சேனல்களில் ஒளி/ஒலிபரப்பப்படுவதன் மூலம் இந்தப் பிரச்சாரம் அகில இந்திய அடைவை (Pan-India reach) எட்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்