எதிர்காலச் சந்ததியினருக்கு புகையிலை விற்பனை செய்வது மீது தடை விதிக்கும் உலகின் முதல் சட்டத்தை நியூசிலாந்து அரசு ரத்து செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் ஆட்சியில் புகைபிடித்தல் தடைச் சட்டம் நிறைவேற்றப் பட்டது.
இந்தத் தடை உத்தரவானது ஜூலை மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்தத் தடை உத்தரவானது 2009 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதிக்கு பிறகு பிறந்த நபர்களுக்கு புகையிலை விற்பனையினைத் தடை செய்கிறது.
மேலும், இதன் கீழ் புகைபிடிப்பதற்கான புகையிலைப் பொருட்களில் உள்ள நிகோடின் உள்ளடக்கத்தை நன்கு குறைப்பதோடு, நாட்டில் புகையிலை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை 90 சதவீதத்திற்கும் மேல் குறைத்துள்ளது.
2004 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி அன்று முதல் பணியிடங்களில் அனைத்து வகையான புகைபிடித்தல் செயல்பாடுகளையும் முடிவிற்கு கொண்டு வந்த உலகின் முதல் நாடாக அயர்லாந்து மாறியது.
2023 ஆம் ஆண்டு மெக்சிகோ கடுமையானப் புகையிலை எதிர்ப்புச் சட்டங்களில் ஒன்றை அறிவித்தது.