புகையிலை விற்பனைப் பொருட்கள் மீதான கடுமையான எச்சரிக்கை ரத்து
December 19 , 2017 2564 days 842 0
2014 சட்டதிருத்த விதியான – புகையிலை பொருட்களின் உறைகளின் மீது 85 சதவிகித அளவில் உடல்நல எச்சரிக்கைக்கான புகைப்படங்களை அச்சிடுவது கட்டாயம் என்ற விதியை கர்நாடக உயர்நீதிமன்றம் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறுவதாக காரணம் காட்டி ரத்து செய்துள்ளது.
ஆனாலும் இந்த விதியில் திருத்தம் செய்வதற்கு முன்னர், 40 சதவிகித அளவிற்கு புகைப்பட எச்சரிக்கை இருக்க வேண்டும் என்று அமல்படுத்தப்பட்ட விதி நடைமுறையில் இருக்கும் என உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 85 சதவிகித புகைப்பட எச்சரிக்கை விதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இந்த உத்தரவை BS படீல் மற்றும் BV நாகரத்னா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ளது.
2016-ம் வருடம் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் [உறையிடல் மற்றும் பெயரிடல்] திருத்த விதிகள், 2014 [The Cigarettes and Other Tobacco Products (Packaging and Labelling) Amendment Rules, 2014 (COTPA)] என்ற விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.
மத்திய சுகாதார அமைச்சகம், அரசியலமைப்பு விதி 19(1)(g) யின் கீழ் உள்ள வியாபாரம் செய்யும் உரிமை மீது காரணமில்லாத கட்டுப்பாடுகளை இது விதிப்பதாகவும் , இந்த உத்தரவு அரசியலமைப்பு விதிகளை மீறும் செயல் என்றும் உயர்நீதிமன்ற அமர்வு கூறியது.
உலகளவில் புகைப்பட வடிவிலான உடல்நல எச்சரிக்கைகளுக்கான சராசரி அளவானது முதன்மையான விளம்பரத் தளத்தில் 30 சதவிகிதம் மட்டுமே ஆகும்.
உலகின் ஒட்டுமொத்த சிகரெட் பயன்பாட்டில் 51 சதவிகிதத்தை கொண்டுள்ள உலகின் முதல் மூன்று சிகரெட் நுகர்வு நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் புகைப்பட எச்சரிக்கைகள் இன்றி, வார்த்தைகள் அடிப்படையிலான எச்சரிக்கைகளை மட்டுமே கொண்டுள்ளன.