TNPSC Thervupettagam

புகையிலை விவசாயிகளின் வருமானம் 2024

January 5 , 2025 7 days 65 0
  • இந்தியாவின் புகையிலை ஏற்றுமதியானது இந்த ஆண்டு 8 சதவீத வளர்ச்சியுடன் சுமார் 13,000 கோடி ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக புகையிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • சீனா, பிரேசில் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகில் பொலிவிலை விர்ஜீனியா (FCV) என்ற புகையிலையை அதிகளவில் உற்பத்தி செய்யும் நான்காவது நாடாக இந்தியா உள்ளது.
  • பிரேசிலுக்கு அடுத்தபடியாக செயல்முறையாக்கப் படாத புகையிலையை (அளவின் அடிப்படையில்) அதிகளவில் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடு இந்தியாவாகும்.
  • 2023-24 ஆம் ஆண்டில், இதன் வெளிநாட்டு ஏற்றுமதிகள் சுமார் 12,005.89 கோடி ரூபாய் மதிப்பிலானதாக இருந்தது (1.5 பில்லியன் டாலர்).
  • இதில் புகையிலை விவசாயிகளின் வருமானமும் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது.
  • ஆந்திரப் பிரதேசப் புகையிலையில் கர்நாடகா ரக புகையிலையை விட அதிக அளவு நிகோடின் உள்ளது.
  • புகையிலைத் தொழில்துறையின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக ஒரு பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் 1976 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று புகையிலை வாரியம் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்