TNPSC Thervupettagam

புகையிலைக் கட்டுப்பாட்டிற்கான உலக சுகாதார அமைப்பின் விருது

June 2 , 2022 781 days 367 0
  • புகையிலை நுகர்வைக் கட்டுப்படுத்தும் தனது சீரிய முயற்சிகளுக்காக ஜார்க்கண்ட் மாநிலமானது 2022 ஆம் ஆண்டிற்கான உலகப் புகையிலை எதிர்ப்புத் தின விருதிற்கு உலக சுகாதார அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • ஜார்கண்ட் மாநில சுகாதாரத் துறையின் மாநிலப் புகையிலைக் கட்டுப்பாட்டுப் பிரிவானது, உலகப் புகையிலை எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருதைப் பெற உள்ளது.
  • தேசியப் புகையிலைக் கட்டுப்பாட்டு திட்டமானது ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இந்த மாநிலத்தில் புகையிலை உபயோகத்தின் பரவல் விகிதம் சுமார் 51.1 சதவீதமாக இருந்தது.
  • இதில் 48 சதவீதத்தினர் புகை பிடிக்காதவர்கள் ஆவர்.
  • 2018 ஆம் ஆண்டிற்கான ஒரு அறிக்கையின்படி, இந்த மாநிலத்தில் புகையிலையைப்  பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 38.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • இதில் 35.4 சதவீதத்தினர் புகை பிடிக்காதவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்