TNPSC Thervupettagam
November 25 , 2020 1340 days 916 0
  • இது தற்போது ஐக்கியப் பேரரசு, அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கான ஒரு வருடாந்திர இலக்கியப் பரிசாகும்.
  • ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அயர்லாந்து அல்லது ஐக்கியப் பேரரசில் வெளியிடப்பட்ட புதினங்களுக்கு (நாவல்) இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
  • பிரிட்டிஷ் எழுத்தாளர் டக்ளஸ் ஸ்டூவர்ட் தனது முதல் புதினமான ஷக்கி பெயினுக்கு (Shuggie Bain) ஐக்கியப் பேரரசின் புக்கர் பரிசை வென்று உள்ளார்.
  • 2019 ஆம் ஆண்டிற்கான ஐக்கியப் பேரரசின் புக்கர் பரிசு 'தி டெஸ்டமெண்ட்ஸ்' (The Testaments) என்ற புதினத்திற்காக மார்கரெட் அட்வுட் அவர்களுக்கும், ‘கேர்ள், வுமன், அதர்’ (Girl, Woman, Other) என்ற புதினத்திற்காக பெர்னார்டைன் எவரிஸ்டோ அவர்களுக்கும் கூட்டாக வழங்கப் பட்டது.
  • இது முன்னர் "புக்கர்-மெக்கானெல் பரிசு" (1969-2001) என்றும் அதன் பிறகு மேன் புக்கர் பரிசு (2002-2019) என்றும் அழைக்கப்பட்டது.
  • 1997 ஆம் ஆண்டில், இந்தியாவைச் சேர்ந்த அருந்ததி ராய் அவர்கள் தனது "தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்" (The God of Small Things) என்ற புதினத்திற்காக புக்கர் பரிசை வென்றார்.
  • ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு, ஐக்கியப் பேரரசு அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் ஒரு புத்தகத்திற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.
  • டச்சு மொழியில் எழுதப்பட்ட “தி டிஸ்கம்போர்ட் ஆப் ஈவினிங்” என்ற புத்தகத்திற்காக மரீகே லூகாஸ் ரைன்வெல்ட் என்பவர் 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார்.
  • இதை மைக்கேல் ஹட்சிசன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்