TNPSC Thervupettagam

புசேவா திட்டம் மற்றும் புதார் வலைப்பக்கம் துவக்கம்

November 26 , 2018 2064 days 582 0
  • மக்களுக்கு நிலப் பதிவுகளை கிடைக்கச் செய்வதற்காக புசேவா திட்டம் மற்றும் புதார் வலைப் பக்கம் ஆகிய திட்டங்களை ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் துவங்கி இருக்கின்றார்.
  • புசேவா திட்டத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு விவசாய நிலங்களுக்கும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற சொத்துக்களுக்கும் புதார் என்றழைக்கப்படும் 11 இலக்க பிரத்தியேக அடையாள எண் ஒதுக்கப்படும்.
  • அனைத்து நில வருவாய் தொடர்பான பரிவர்த்தனைகளான மாற்றுதல், பதிவு செய்தல் போன்ற அனைத்தும் புதார் அட்டையின் மூலமாகவே செயல்படுத்தப்படும்.
  • தற்காலிக புதார் எண்ணானது 99 என்ற எண்ணுடனும் நிரந்தர புதார் எண்ணானது 28 என்ற எண்ணுடனும் தொடங்கும். அரசு நிலமெனில் 28 என்ற எண்ணைத் தொடர்ந்து 00 என்ற எண்கள் இடம்பெறும்.
  • இரண்டு வகையான புதார் அட்டைகள் உள்ளன. அவையாவன
    • இ-புதார் (e-Bhudaar)
    • எம்-புதார் (M-Bhudaar)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்