TNPSC Thervupettagam

புடினின் கிர்கிஸ்தான் பயணம்

October 19 , 2023 275 days 178 0
  • மத்திய ஆசிய நாட்டிற்கான பயணத்தில் கிர்கிஸ்தானுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கு விளாடிமிர் புடின் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
  • மார்ச் மாதத்தில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் அவருக்குக் கைது ஆணை பிறப்பித்த பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
  • உக்ரேனிய நாட்டின் குழந்தைகளை நாடு கடத்திய விவகாரத்தில் நீதிமன்றத்தினால் அதிபர் புடினுக்குப் பிடியாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • கிர்கிஸ்தான் இடம் பெறாத சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர் நாடுகள் தங்கள் நாடுகளின் எல்லைக்குள் அவர் நுழைந்தால் அவரை கைது செய்ய வேண்டும் என்று அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • கிர்கிஸ்தான் நாடானது, கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் ஒரு பகுதியாகும்.
  • இது ரஷ்யா தலைமையிலான முன்னாள் சோவியத் நாடுகளின் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் பாணியிலான ஒரு இராணுவக் கூட்டணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்