TNPSC Thervupettagam

புதன் கோளின் தென் துருவம்

September 15 , 2024 14 days 30 0
  • சமீபத்தில் பெபிகொலம்போ விண்கலம் ஆனது புதன் கிரகத்திற்கு மிக அருகில் 4வது முறையாக பறந்து சென்றுள்ளது.
  • இந்த செயற்கைக்கோள் ஆனது 165 கிலோமீட்டர் என்ற மிகக் குறைந்த தொலைவில் கிரகத்தின் மேற்பரப்பை நெருங்கிச் சென்றது.
  • அப்போது, ​​புதன் கோளின் தென் துருவத்தின் முதல் படங்களை ஆய்வுக் கலம் எடுத்து உள்ளது.
  • புதன் கோளின் மேற்பரப்பில் இருந்து சுமார் 3,500 கிமீ தொலைவில் ஆய்வு செய்யப் பட்ட போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் எடுக்கப்பட்டது.
  • பெபிகொலம்போ விண்கலமானது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்டது.
  • இந்த ஆய்வுக் கலமானது 2 விண்கலங்களைக் கொண்டுள்ளது:
    • ஐரோப்பிய விண்வெளி முகமையின் புதன் கோள் சுற்றுக் கலம் மற்றும்
    • ஜப்பான் வானியல் ஆய்வு முகமையின் புதன் கோள் காந்த மண்டலச் சுற்றுக் கலம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்