பெபி கொலம்போ விண்கலம் ஆனது, 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று வெப்பம் மிகுந்த புதன் கிரகத்திற்கு அருகில் முதல் முறையாக நெருங்கிப் பறந்தது.
இந்த விண்கலமானது, புதன் கோளின் வட அரைக் கோளத்தின் இரவு நேரப் பகுதியை நெருங்கி, தெற்கு அரைக் கோளத்தின் காலை நேரப் பகுதியை நெருங்கியது.
இந்த விண்கலம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புத் தகவலைப் பயன்படுத்தி, புதன் கிரகத்தின் மேற்பரப்பில் விழும் சூரியனிலிருந்து வரும் எலக்ட்ரான்கள் புதன் கோளின் மீது ஊடு கதிர் வீச்சு துருவ மின்னொளிகளை உருவாக்குகின்றன என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
புதன் மிகவும் மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டுள்ள, அதாவது சூரியக் காற்றில் இருந்து வரும் பெருமளவிலான பல்வேறு எலக்ட்ரான்கள் புதன் கோளின் மேற்பரப்பில் மோதுகின்றன.