TNPSC Thervupettagam

புதர்த் தவளைகளின் 5 புதிய இனங்கள்

March 6 , 2021 1235 days 594 0
  • புதர்த் தவளைகளின் 5 புதிய இனங்கள் இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • மேற்குத் தொடர்ச்சி மலையானது உலகளவில் பல்லுயிர்ப் பெருக்க முக்கியத் தளங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் தவளைகள் பண்டைய உலக மரத் தவளைக் குடும்பமான ரக்சோபோரிடே (Rhacophoridae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.
  • இவை தில்லி பல்கலைக்கழகம், கேரள வன ஆராய்ச்சி மையம் மற்றும் மின்னசொட்டா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச்  சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • இந்த ஆராய்ச்சியானது ஏறத்தாழ கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்குத் தொடர்ச்சி மலையின் (ராஆர்ச்செஸ்டிஸ்) புதர்த் தவளை என்பது குறித்த மிக விரிவான ஆய்வின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் தகவல்கள் பியர்ஜெ என்பதில் வெளியிடப்பட்டுள்ளன.
  • இந்தப் புதிய 5 இனங்கள் பின்வருமாறு
    • ராவ்ஆர்ச்செஸ்டிஸ் டுரூட்டாகு
    • ராவ்ஆர்ச்செஸ்டிஸ் காக்காயாமென்சிஸ்
    • ராவ்ஆர்ச்செஸ்டிஸ் கெய்ராசபினே
    • ராவ்ஆர்ச்செஸ்டிஸ் சஞ்சாபாய்
    • ராவ்ஆர்ச்செஸ்டிஸ் வெள்ளிக்கண்ணன்
  • இந்தப் புதிய 5 இனங்களும் கேரளா மாநிலம் தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்