TNPSC Thervupettagam

புதிதாக கண்டறியப்பட்டுள்ள திராவிடா பேரின மண்புழுக்கள்

August 22 , 2017 2692 days 1016 0
  • மேற்கு தொடர்ச்சி மலைகளின் கேரளப் பகுதியில் , இரண்டு வகைப் பழங்கால மண்புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இந்த இரண்டு வகை மண்புழுக்களுக்கு திராவிடா பாலிடைவர்டிகுலேடா (Drawida polydiverticulata) மற்றும் திராவிடா டோமாசி (Drawida thomasi) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • கேரளா மாநிலத்தில் திராவிடா பேரினத்தைச் சேர்ந்த பதினாறு மண்புழுக்கள் உள்ளன. இதில் பத்து திராவிடா மண்புழுக்கள் தனித்தன்மை வாய்ந்தவை ஆகும்.
  • இந்தியத் துணைக் கண்டத்தில் திராவிடா பேரினங்களைச் (Drawida genus) சேர்ந்த 73 இனங்கள் வாழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியான இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகின்றது. திராவிடா பேரினங்கள் பெருக்கத்தில் கேரள மாநிலம் பெரும் பங்கு வகிக்கின்றது.
திராவிடா பாலிடைவர்டிகுலேடா
  • திராவிடா பாலிடைவர்டிகுலேடா மண்புழுக்களின் முன் பகுதியில் டைவர்டிகுழுமஸ் (diverticulums) எனும் பிரத்யேக பிளவுத்துண்டுகள் அமைந்திருக்கும். திராவிடா பேரினங்களில் இது தனித்துவமான உடல் உறுப்பு ஆகும்.
  • காணப்படும் இடங்கள் :
    • மூணாறு பகுதியில் உள்ள சோலைக் காடுகள்
    • எரவிக்குளம் தேசியப் பூங்கா
    • பாம்பாதூன் தேசியப் பூங்கா (Pampadun Shola National Park)
    • சின்னாறு வனவிலங்குகள் சரணாலயம்
திராவிடா தோமாசி
  • காணப்படும் இடங்கள் :
    • கோழிப்பாறை நீர்வீழ்ச்சி அருகில் உள்ள காக்கதம்போயில் (Kakkadampoyil) பகுதிகள்
    • மலப்புரம் கோழிக்கோடு எல்லைப் பகுதிகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்