மகாத்மா காந்தி (புதிய) தொடர்களில் லேவண்டர் நிற 100 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
100 ரூபாய் நோட்டின் முன்பகுதியில் மகாத்மா காந்தியின் முகமும் பின்பகுதியில் நாட்டின் பண்பாட்டுத் தளத்தினை சிறப்பிக்கும் அம்சங்களைக் கொண்ட “ராணி கி வாவ்” தளமும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
11வது நூற்றாண்டு அரசன் பீமாவின் நினைவாக கட்டப்பட்ட குஜராத்தின் பதானில் உள்ள படிக்கட்டுக் கிணறுத் தளம் “ராணி கி வாவ்” UNESCO-ன் உலக பாரம்பரியத் தளமாகும்.