TNPSC Thervupettagam

புதிய 15 அம்ச திட்டம் 2025

February 15 , 2025 12 days 102 0
  • சிறுபான்மையினரின் நலனுக்கான பிரதமரின் புதிய 15 அம்ச திட்டங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
  • இந்தத் திட்டம் ஆனது, மத்திய அரசு அறிவித்த ஆறு சிறுபான்மைச் சமூகங்களின் நலிவடைந்த மற்றும் பலவீனமான பிரிவினர் பல்வேறு திட்டங்களைப் பெறுவதற்கான சம வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், இத்திட்டத்தில் பங்கேற்கும் அமைச்சகங்கள்/துறைகளின் பல்வேறு திட்டங்கள்/முயற்சிகளை உள்ளடக்கியது.
  • இந்த திட்டம் பின்வரும் பரந்த நோக்கங்களைக் கொண்டுள்ளது:
    • கல்விக்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல்;
    • தற்போதுள்ள மற்றும் புதியத் திட்டங்கள் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்குச் சமமான பங்கை உறுதி செய்தல், சுயதொழிலுக்கான மேம்படுத்தப் பட்ட கடன் ஆதரவு மற்றும் மாநில மற்றும் மத்திய அரசு வேலைகளில் ஆட்சேர்ப்பு;
    • உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் சிறுபான்மையினருக்கு மிகவும் ஒரு பொருத்தமானப் பங்கை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கை சூழலை மேம்படுத்துதல்; மற்றும்
    • சமூக ஒற்றுமையின்மை மற்றும் வன்முறையைத் தடுத்தல் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்