12 பக்கம் கொண்ட பலகோணமான 27 மீ.மீ அளவுள்ள “டோடிகேகோன்” வடிவத்திலான ஒரு புதிய 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கியானது முதல்முறையாக 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
மேலும், இந்தியப் பிரதமர் “பார்வைக் குறைபாடு உடையோர்களுக்கு உகந்த” நாணயங்களின் (ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20) புதிய வரிசையையும் வெளியிட்டார்.