தற்போது அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களின் (MSME) வகைப்பாட்டிற்கான முதலீடு மற்றும் வருவாய் வரம்புகள் முறையே 2.5 மற்றும் இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும்.
குறு நிறுவனமாக வகைப்படுத்தப்படுவதற்கான முதலீட்டு வரம்பு 2.5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
சிறு நிறுவனங்களுக்கான இந்த வரம்பு ஆனது 25 கோடி ரூபாயாகவும், நடுத்தர நிறுவனங்களுக்கான வரம்பு 125 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.
இதே போல் இந்த வகைப்பாடுகளுக்கான வருவாய் வரம்பு குறு நிறுவனங்களுக்கு 10 கோடி ரூபாயாகவும், சிறு நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாயாகவும், நடுத்தர நிறுவனங்களுக்கு 500 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.
தற்போது, 7.5 கோடி பணியாளர்களைப் பணிக்கு அமர்த்திய, நாட்டின் உற்பத்தியில் 36 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட MSME நிறுவனங்கள் உள்ளன.