TNPSC Thervupettagam

புதிய அமைச்சரவைக் குழு அமைச்சர்கள்

June 13 , 2024 167 days 234 0
  • புதிய அரசின் முதல் கூட்டம் ஆனது பிரதமர் அவர்களின் தலைமையில் நடைபெற்று இலாகா ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டது.
  • இரண்டு பெண்களுக்கு அமைச்சரவைக் குழுவில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதுடன் ஏழு பெண் தலைவர்கள் அமைச்சரவைக் குழுவில் சேர்க்கப்பட்டனர்.
  • தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சரவையில் 11 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
  • உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகாரங்கள் துறை ஆகிய முன்னணி நான்கு அமைச்சகங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
  • தொடர்ந்து மூன்றாவது முறையாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக நிதின் கட்கரி பதவியேற்றுள்ளார்.
  • மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
  • அதே நேரத்தில், அமைச்சரவைக் குழு அமைச்சராகப் பதவியேற்றுள்ள பாஜக தலைவர் J.P. நட்டா, சுகாதார அமைச்சகத்தின் பொறுப்பினையும் ஏற்றுள்ளார்.
  • ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், மின்சாரம் மற்றும் வீட்டு வசதி போன்ற முக்கிய இலாகாக்களைக் கொண்டிருப்பார்.
  • 10 முன்னணி அமைச்சர்களில், H.D. குமாரசாமி மட்டுமே பாஜக சாராத தலைவராவார்.
  • அவருக்கு கனரக தொழில்துறைகள் மற்றும் எஃகு அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.
  • அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு இரயில்வே அமைச்சர் பதவி மீண்டும் வழங்கப் பட்டுள்ளது.
  • V. சோமன்னா மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் இரயில்வே அமைச்சகத்தின் இணை அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
  • அன்னபூர்ணா தேவிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் பொறுப்பு அளிக்கபட்டுள்ளது.
  • தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, அரசாங்கத்தின் இளம் அமைச்சரான K. ராம் மோகன் நாயுடு, விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
  • விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமிக்கப் பட்டுள்ளார்.
  • விளையாட்டுத் துறையின் இளம் இணை அமைச்சராக ரக்சா காட்சே நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • L. முருகனுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
  • கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் கோபி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சகம் ஆகியவற்றின் இணை அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • முதல் முறையாக எந்தவொரு இஸ்லாமியப் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சராக பதவியேற்கவில்லை.
  • உண்மையில், இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியினைச் சேர்ந்த எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரும் 18வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்