ஏமனின் அதிபர் அப்திரப்பு மன்சூர் ஹௌதியின் படைகளுக்கும் ஏமனின் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் டிசம்பர் 18 அன்று துறைமுக நகரமான ஹோதிடாவில் அமலுக்கு வந்தது.
இந்த ஒப்பந்தமானது ஸ்டாக்ஹோமில் ஐ.நா. சபை நடுவராக ஈடுபட்டு நடைபெற்ற ஒரு பேச்சுவார்த்தையில் வைத்து கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி 21 நாட்களில் அனைத்து சண்டையிடுபவர்களும் ஹோதிடாவிலிருந்து திரும்ப வேண்டும்.
அமைதி நிலையை மேற்பார்வையிடுவதற்காக அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களின் பிரதிநிகளின் கண்காணிப்புக் குழுவை ஐ.நா. கண்காணிப்பாளர்கள் அமைப்பர்.