கியூபாவில் தனிநபர் சொத்துரிமை அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும் ஒரு புதிய அரசியலமைப்பு மீதான வாக்கெடுப்பில் வாக்காளர்கள் பங்கு பெற்றனர்.
இந்த வாக்கெடுப்பு புதிய வாக்கெடுப்பு மீது ஆம் மற்றும் இல்லை என்ற இரண்டு விருப்பத் தேர்வுகளை மட்டுமே கொண்டிருந்தது.
80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டனர்.
1976 பதிப்பை மாற்றம் செய்யும் இந்த புதிய அரசியலமைப்பு, திறந்த சந்தை மற்றும் தனியார் முதலீடு ஆகியவற்றுக்கான கட்டுப்படுத்தப்பட்ட உரிமையை கம்யூனிசக் கட்சியின் கட்டுப்பாட்டில் மட்டுமே கொண்டிருக்க அங்கீகாரம் அளிக்கின்றது.
இது நாட்டின் ஒரே சித்தாந்தமாக பொதுவுடைமையை மேற்கோள் காட்டுகின்றது.
பொதுவாக தேர்தல்களைப் புறக்கணித்திட அழைப்பு விடுக்கும் அல்லது வாக்குச் சீட்டுகளை சேதாரப்படுத்தும் கியூபாவின் தடை செய்யப்பட்ட எதிர்க்கட்சியானது இம்முறை ‘இல்லை’ என்ற விருப்புரிமையின் மீது வாக்களிக்க பிரச்சாரம் செய்தது.