TNPSC Thervupettagam

புதிய அல்பைன் தாவர இனங்கள்

March 3 , 2021 1238 days 716 0
  • விஞ்ஞானிகளைக் கொண்ட ஒரு குழுவானது அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் ஒரு புதிய அல்பைன் தாவர இனத்தைத் கண்டறிந்துள்ளது.
  • இந்தத் தகவல்கள் “பயோடைவர்சிட்டாஸ் :உயிரியல் பல்லுயிர்ப் பெருக்க இதழ்” என்ற இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய தாவர இனமானது இமயமலை சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தது ஆகும்.
  • இதற்கு ‘சிரமந்த்தோடியம் இண்டிகம்’ (Cremanthodium indicum) என்று பெயரிடப் பட்டு உள்ளது.
  • இந்தத் தாவர இனமானது பொதுவாக ஜூலை மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை மலர்கிறது.
  • இது தவாங் மாவட்டத்தின் பெங்கா-டெங் சோ ஏரியில் மட்டுமே காணப்படுகின்றது.
  • பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் வழிகாட்டுதலின் படி, இந்த ஆல்பைன் தாவர இனமானது “மிகவும் அருகி வரும் இனமாக” பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்