ஐக்கிய அரபு அமீரகமானது ‘ஜெபல் அலி எரிவாயுப் பகுதி’ எனப்படும் மிகப்பெரிய ஆழமற்ற எரிவாயு வளங்களைக் கண்டுபிடித்துள்ளது.
இது அபுதாபி மற்றும் துபாய் ஆகியவற்றின் எல்லைப் பகுதியில் 5,000 சதுர கிலோமீட்டர் (சதுர மீட்டர்) பரப்பளவில் 80 டிரில்லியன் நிலையான கன அடி எரிவாயு இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பானது ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிவாயுவில் தன்னிறைவை அடைவதற்கான நோக்கத்தை மேம்படுத்துவதோடு பெரிய வளர்ச்சித் திட்டங்களையும் மேம்படுத்த உதவ இருக்கின்றது.