TNPSC Thervupettagam

புதிய இராம்சர் தளங்கள் – இந்தியா

August 19 , 2024 96 days 214 0
  • திருப்பூரில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள கழுவேலி பறவைகள் சரணாலயம் ஆகியவை சமீபத்தில் சர்வதேச அங்கீகாரத்தினை பெற்றுள்ளன.
  • இந்தப் புதிய சேர்க்கைகளின் மூலம், தமிழகத்தில் உள்ள இராம்சர் தளங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்ற நிலையில் இது இந்திய மாநிலங்களிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள தவா நீர்த்தேக்கம் ஆனது தற்போது இராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவில் உள்ள இராம்சர் தளங்களின் (மொத்த இராம்சர் தளங்களின் பரப்பு 13,58,068 ஹெக்டேர் பரப்பளவு) எண்ணிக்கையை 85 ஆக உயர்த்தியுள்ளது.
  • 1982 முதல் 2013 ஆம் ஆண்டு வரை, நாட்டில் உள்ள இராம்சர் தளங்களின் பட்டியலில் மொத்தம் 26 தளங்கள் சேர்க்கப்பட்டன.
  • 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, இந்தியா 59 புதிய ஈரநிலங்களை இராம்சர் தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
  • தற்போது, ​​தமிழ்நாடு அதிகபட்ச இராம்சர் தளங்களை (18 தளங்கள்) கொண்டுள்ளது,  அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (10 தளங்கள்) இடம் பெற்றுள்ளது.
  • ஐக்கியப் பேரரசு (175) மற்றும் மெக்சிகோ (142) ஆகியவை மிகவும் அதிகபட்ச இராம்சர் தளங்களைக் கொண்டுள்ளன.
  • பொலிவியா நாடானது அதிக பரப்பளவை (148,000 சதுர கிமீ) இந்த உடன்படிக்கையின் பாதுகாப்பை பெறுவதற்கான இப்பட்டியலில் சேர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்