TNPSC Thervupettagam

புதிய இரும்புத்தாது இருப்பு

February 21 , 2024 309 days 283 0
  • ராஜஸ்தான் மாநிலத்தின் சுரங்கத் துறையானது கோடா, தாதரோலி, டோடுபுரா மற்றும் கரௌலியின் ஹிண்டன் அருகே உள்ள லிலோட்டி ஆகிய இடங்களில் 840 மில்லியன் டன்களுக்கும் மேலான இரும்புத் தாதுக்கள் இருப்பதைக் கண்டுபிடித்து உள்ளது.
  • இரும்புத் தாதுவின் மேக்னடைட் மற்றும் ஹேமடைட் ஆகிய இரண்டும் காணப் படுவதற்கான ஆரம்பக் கட்ட ஆய்வு அறிகுறிகள் கண்டறியப் பட்டுள்ளன.
  • கரௌலியின் கோடாவில் 462.3 ஹெக்டேர் பரப்பிலும், தாதரோலியில் 754.38 ஹெக்டேர் பரப்பிலும், தொடுபுராவில் 260.71 ஹெக்டேர் பரப்பிலும் மற்றும் லிலோட்டியில் 410.94 ஹெக்டேர் பரப்பிலும் இரும்புத் தாதுப் படிவுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்