TNPSC Thervupettagam

புதிய உணவுப் பூங்கா – கங்கை கொண்டான்

March 5 , 2021 1420 days 854 0
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த திரு. பன்னீர் செல்வம் அவர்கள் தமிழ்நாடு அரசு திருநெல்வேலியில் உள்ள கங்கை கொண்டானில் ஒரு மிகப்பெரிய உணவுப் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
  • மேலும் இவர் தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் உணவுப் பூங்காக்களை அமைப்பதற்குப் பரிந்துரைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
  • மேலும் அவர் தேனீ, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மேலும் 8 வேளாண் பதப்படுத்துதல் தொகுப்புகளை அமைப்பதற்குப் பரிந்துரைக்கப் பட்டு உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
  • இவை பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனாவின் கீழ் அமைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்