இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபையின் மத்தியத் தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, கோப்ரினோப்சிஸ் சினிரியா என்ற புதிய உண்ணக் கூடிய காளான் இனத்தினை அடையாளம் கண்டு உள்ளது.
இது இயற்கையாகவே பாக்குகளின் உமிகள் (தோல் பகுதி) வளரும் காளான் வகை ஆகும்.
கோப்ரினோப்சிஸ் என்பது கரிமப் பொருட்களைச் சிதைப்பதில் அவை கொண்டுள்ள முக்கிய சுற்றுச்சூழல் பங்கிற்காக அறியப்படுகின்ற காளான்களின் ஒரு இனமாகும்.