இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கமானது எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பனக் கொள்கையை முழமையாக சீராய்வு செய்திருக்கின்றது.
குறைவாக ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் மீதான லாபத்தின் எந்த ஒரு பங்கின் மீதும் அரசு எந்த கட்டணத்தையும் விதிக்காது. ஏனெனில் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்திடும் நோக்கில் அரசானது நழுவிக் கொண்டிருக்கும் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திட திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.
எண்ணெய் வளாகங்கள் எவ்வாறாக இருந்தாலும், உற்பத்தியாளர்கள் எதிர்கால ஏலச் சுற்றுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கான சந்தைப்படுத்துதல் மற்றும் விலைப்படுத்துதல் ஆகியவற்றில் முழுமையான சுதந்திரத்தைப் பெறுவர்.
ஏற்கெனவே வர்த்தக உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்ட கிருஷ்ணா-கோதாவரி, மும்பை கடற்பகுதி, ராஜஸ்தான் அல்லது அசாம் போன்ற முதல் வகை வண்டற்படிவு வளாகங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் இருந்து பெறப்படும் வருவாயில் ஒரு பங்கினை நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
குறைவாக ஆய்வு செய்யப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதி வளாகங்களில் எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் மீது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஆதாயப் பங்கு கட்டணங்கள் மட்டுமே நிறுவனங்கள் மீது விதிக்கப்படும்.