TNPSC Thervupettagam

புதிய எய்ம்ஸ் மருத்துவமனை - பிலாஸ்பூர்

January 6 , 2018 2386 days 769 0
  • பிரதான் மந்திரி சுவஸ்த்ய் சுரக்ஷா யோஜனா (Pradhan Mantri Swasthya Suraksha Yojana - PMSSY) என்ற திட்டத்தின் கீழ் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
  • இந்தப் புதிய மருத்துவமனை 48 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்.
  • 20 சிறப்பு /பல்நோக்கு சிறப்புத் துறைகளோடு பழங்கால முறையில் வைத்தியமளிக்க 30 படுக்கைகளுடன் கூடிய ஆயுஷ் துறையையும் இது கொண்டிருக்கும்.
  • இதன் நோக்கங்கள் நாடு முழுவதும் தரமான மருத்துவக் கல்விக்கான வசதிகளை ஏற்படுத்துவதும், நம்பிக்கையான மற்றும் மலிவான மூன்றாம் நிலை மருத்துவச் சேவைகளில் பிராந்திய ஏற்றத் தாழ்வுகளை சரிக்கட்டுவதும் ஆகும்.

பிரதான் மந்திரி சுவஸ்த்ய சுரக்ஷா யோஜனா

  • பிரதான் மந்திரி சுவஸ்த்ய் சுரக்ஷா யோஜனா (Pradhan Mantri Swasthya Suraksha Yojana-PMSSY) 2003 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சாதரணமான அரசு மருத்துவமனைகளிடமிருந்து வேறுபட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிறுவுவதாகும்.
  • சுகாதாரத்திற்கான உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் ஆதரவுத் திட்டங்களிலிருந்து இத்திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்