உலகளாவிய, தூய்மை எரிசக்தி ஆராய்ச்சி வழங்குநரான BloombergNEF என்ற நிறுவனமானது 2022 ஆம் ஆண்டிற்கான புதிய எரிசக்தி கண்ணோட்ட அறிக்கை என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து, குறிப்பாக இந்தியாவில் இருந்து வெளியிடப்படும் பசுமை இல்ல வாயு உமிழ்வானது 2030 ஆம் ஆண்டின் இறுதி வரை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2030 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் மட்டுமே இந்த நாடுகளில் உமிழ்வு அளவானது குறையும்.
2022 ஆம் ஆண்டில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உமிழ்வு அளவுகள் ஏற்கனவே உச்ச நிலையை எட்டியுள்ளதால், அடுத்து வரும் ஆண்டுகளில் உமிழ்வின் அளவுகள் வேகமாகக் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சீனாவில், உமிழ்வு அளவுகளானது 2022 ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டும் என்றும், வளர்ச்சியடைந்த நாடுகளின் போக்குடன் இது இணைவதற்கு முன்பாக சில ஆண்டுகளுக்கு அந்த அளவுகள் நிலைபெறும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்தச் செய்வதற்கான இலக்கினை எளிதில் அடைய முடியாது.
தீவிர முயற்சி நடவடிக்கைகள் எடுக்கப் பட்டால், உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பினை 1.77 டிகிரி செல்சியஸ் வரை நிலையாக பேண முடியும்.
இருப்பினும், 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர சுழிய இலக்கை அடைவதற்கு, தூய எரிசக்தி துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடானது புதைபடிவ எரிபொருட்கள் துறையில் மேற்கொள்ளப் படும் அளவினை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் உமிழ்வுகள் 30 சதவிகிதம் குறைய வேண்டும் மற்றும் 2040 ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 6 சதவிகிதம் என்ற வீதத்தில் குறைய வேண்டும்.