TNPSC Thervupettagam

புதிய எரிமலை தீவு – ஜப்பான்

November 15 , 2023 248 days 175 0
  • சமீபத்தில், கடலுக்கடியில் ஏற்பட்ட ஓர் எரிமலை வெடிப்பானது, ஜப்பானின் ஒகஸ்வாரா தீவு தொடரமைப்பிற்கு அருகில் ஒரு புதிய தீவு உருவாக வழி வகுத்தது.
  • இதுவரை பெயரிடப்படாத இந்தப் புதிய தீவு சுமார் 100 மீட்டர் விட்டம் கொண்டது. என்பதோடு இது நீர்ப்பரப்பு வழி பாறைக் குழம்பு வெளியேற்றம் (ப்ரீடோமாக்மாடிக் வெடிப்புகள்) காரணமாகவும் உருவாக்கப்பட்டது.
  • கடல்நீருடன் பாறைக் குழம்பு தொடர்பு கொண்டு சாம்பல் மற்றும் நீராவி வெளியேறும் வெடிப்புகளை உருவாக்கும் போது இது நிகழ்கிறது.
  • ஐவோ ஜிமா என்பது ஒகஸ்வாரா தீவின் தெற்கே அமைந்த செயல்பாட்டில் உள்ள எரிமலையாகும்.
  • இது ஃபுகுடோகு-ஒகனோபா என்ற கடலடி எரிமலைக்கு வடக்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்