ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நாகயலங்கா பகுதியில் புதிய எறிகணை சோதனைத் தளத்தினை நிறுவப் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது நாட்டிலுள்ள பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் அதிக எண்ணிக்கையிலான உத்தி சார் பயன்பாட்டு எறிகணை அமைப்புகளை சோதிக்க வழி வகுக்கும்.
இந்தப் புதிய தளமானது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் நிலம் விட்டு வான் நோக்கி ஏவப்படும் எறிகணைகள், பீரங்கி எதிர்ப்பு எறிகணைகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகளின் சோதனைகளை மேற்கொள்ள உதவும்.