TNPSC Thervupettagam

புதிய எறும்பினம்

November 8 , 2017 2603 days 901 0
  • கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள பெரியார் புலிகள் காப்பகத்தில் புதிய எறும்பின வகை ஒன்றை  ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்தியாவின் “எறும்பு மனிதன்” என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற எறும்பியலாளரான (myrmecologist) முஸ்தக் அலியை கவுரவிக்கும் வகையில் அவருடைய பெயர்கொண்டு இந்த புதிய எறும்பினத்திற்கு “தைரன்னோமைர்மெஸ் அலி” (Tyrannomyrmen Alli அல்லது alli) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்புதிய எறும்பினமானது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் இருந்து தென்கிழக்கு ஆசியா வரை நீண்டுள்ள இந்தோ-மலாய் உயிர் மண்டலத்தில் (Indo-Malayan bio-region) பரவியுள்ள எறும்பு பேரினத்தின் மிர்மிசின் (myrmicine) எனும் அரிய வகை துணைக்குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும்.
  • தற்போது இவை அரிய தைரன்னேமைர்மெஸ் பேரினத்தைச் சேர்ந்த நான்காவது இனமாகும். இந்தியாவில் உள்ள இரண்டாவது தைரன்னோமைர்மெஸ் பேரினத்தை சேர்ந்த இனமாகும்.
  • எறும்புகளைப் பற்றிய படிப்பு மிர்மிகாலாஜி (myrmecology) எனப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்