தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் குளோரோபில் அற்ற, பூக்கும் தன்மையுடைய புதிய ஒட்டுண்ணித் தாவர இனத்தை நாகாலாந்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இவை ஹாஸ்டோரியம் (haustorium) எனும் உறிஞ்சு உறுப்புகளின் மூலம் ஓம்புயிரிகளிலிருந்து (Host) ஊட்டச்சத்துகளை உறிஞ்சி உயிர் வாழத்தக்க தன்மையுடையவை.
ஹாஸ்டோரியம் என்பது ஒட்டுண்ணிகளின் சிறப்பு உறுப்பு அமைப்பாகும். இவற்றின் மூலம் ஒட்டுண்ணிகள் தங்களை ஓம்புயிரிகளின் திசுக்களுடன் இணைத்துக் கொண்டு ஊட்டச்சத்துகளை உறிஞ்சிவிடும்.
நாகா மக்களின் ”கொன்யாக்” (Konyak) பழங்குடியினரை கவுரவிக்கும் வகையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஒட்டுண்ணிக்கு கிளேடோவியா கொன்யாகியானோரம் (Gleadovia Konyakianorum) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது ஓர் முழு ஒட்டுண்ணியாகும் (ஹாலோ பாரஸைட் – Haloparasite).
இவை தங்களுக்குத் தேவையான முழு ஊட்டச்சத்துகளையும் ஓம்புயிரிகளிலிருந்தே பெறும்.
இந்த ஒட்டுண்ணியானது நாகாலாந்தில் 1,500 முதல் 1,600 மீட்டர் கடல் மட்ட உயரத்தில் அமைந்துள்ள பகுதி – மித வெப்ப மண்டல காடுகளில் (semi-evergreen forest) கண்டறியப்பட்டுள்ளது.
கிளேடோவியா கொன்யாகியானோரம் தாவரமானது உலகம் முழுவதும் கிளேடோவியா பேரினத்தில் கண்டறியப்பட்டுள்ள நான்காவது இனமாகும்.
இவை ஓர் வேர் ஒட்டுண்ணியாகும். இவை 10 செ.மீ. உயரம் வரை வளரக் கூடியது.
இவை குழாய் வடிவிலான (tubular) வெள்ளை நிறப் பூக்களை பூக்கவல்லது.