TNPSC Thervupettagam

புதிய ஒளிவழி வேதிவினையூக்கி

October 23 , 2024 34 days 101 0
  • சல்ஃபாமெத்தோக்சசோலில் சிதைவுறக்கக் கூடிய மிகவும் திறம் மிக்க ஒளி வழி வேதி வினையூக்கியை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • இது அபாயகரமான இரசாயனங்களைக் குறைவாகக் கொண்ட மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மாசுபாட்டுடன் நன்கு தொடர்புடைய சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கக் கூடிய ஒரு பரந்த அளவிலான பயன்பாடு கொண்ட ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பி ஆகும்.
  • நுண்ணுயிர் எதிர்ப்பி மாசுபாடு ஆனது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் எதிர்ப்புத் திறன், சூழலியல் பாதிப்பு, மனித உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் போன்ற பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
  • அறிவியலாளர்கள் தாமிர துத்தநாக வெள்ளீய சல்பைட் Cu2ZnSnS4 (CZTS) நுண் துகள்கள் (NPs) மற்றும் தாமிரத் துத்தநாக வெள்ளீய சல்பைட் - டங்ஸ்டன் டைசல்பைட் CZTS-WS2 கலவையை ஒருங்கிணைத்துள்ளனர்.
  • சல்ஃபாமெதோக்சசோல் (SMX) போன்ற மிகப் பரந்த பயன்பாடு கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நீண்ட காலமாக சிறுநீர் மற்றும் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் போன்ற மனித நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப் படுகின்றன.
  • இருப்பினும், சுமார் 54%க்கும் அதிகமான SMX ஆனது, நோயாளிகளின் மலம் மற்றும் சிறுநீருடன் கலந்து சுற்றுச்சூழலில் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்