ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை சிறிய பல்லி இனத்தினைக் கண்டறிந்துள்ளனர்.
இது "மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறிய டிராகன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அகஸ்தியாகம எட்ஜ் அல்லது வடக்கு கங்காரு பல்லி என்பது அகமிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
இது இலண்டனின் விலங்கியல் சங்கத்தின் பரிணாம அடிப்படையில் தனித்துவமான மற்றும் உலகளவில் அருகி வரும் விலங்கினங்கள் (EDGE) திட்டத்தின் பெயரால் பெயரிடப் பட்டது.
இது A. பெட்டோமி அல்லது இந்திய கங்காரு பல்லி இனத்திற்குப் பிறகு அகஸ்தியாகமா இனத்தில் உள்ள இரண்டாவது இனமாகும்.
A. பெட்டோமி முன்னதாக தமிழ்நாட்டின் சிவகிரி மலைகளில் தென்பட்டதாக பதிவாகி உள்ளது.