மத்திய அரசானது, ஒரு மிகவும் அவசரமான சூழலில் சொத்துக்களை விற்கும் சிறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் கடன் உத்தரவாதத் திட்டத்தினை (CGS) அறிமுகப் படுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு உதவுவதற்காக இந்தத் திட்டத்தின் மூலம் 1000 கோடி ரூபாய் நிதி வழங்கப் படுகிறது.
இது மிகக் குறிப்பாக சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள், மின்னணுக் கிடங்கு ரசீதுகளைப் பயன்படுத்தி அறுவடைக்குப் பிந்தைய கடன்களை அணுகச் செய்வதற்கு உதவும்.
புதுப்பிக்கப்பட்ட கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், வங்கிகள் கிடங்கு ரசீதுகளுக்கு (e-NWR) வேளாண் கடன்களை வழங்கும்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைச் சமர்ப்பித்து, கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் (WDRA) பதிவு செய்யப்பட்ட தானியக் களஞ்சியங்களால் வழங்கப்பட்ட இணைய வழி கிடங்கு ரசீதுகளைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பைப் பெறுவர்.
வங்கிகளுக்குத் தேவையான கடன்களை வழங்குவதற்கு என இது ஒரு பிணையமாகச் செயல்படும்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விலை உயரும் போது விற்க இயலும்.
சுமார் 21 லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்பிலான மொத்தமுள்ள வேளாண் கடனில், அறுவடைக்குப் பிந்தையப் பயன்பாட்டிற்காகப் பெறப்பட்ட கடன் ஆனது தற்போது 40,000 கோடி ரூபாயாக உள்ளது.